பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்

புதுடெல்லி: கடந்த 2018ல் ஆசிய கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதில்  பாகிஸ்தான் வீரர்கள் வந்து விளையாடுவதற்கான விசாவைப் பெறுவதில் சிக்கல்கள் நீடித்ததால், ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு ஆசியக் கோப்பை - 2020 போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், அண்டை நாடான பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்து வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுைகயில், ‘போட்டிக்கான உரிமையை யார் வைத்திருக்கிறார்கள் என்பது இப்போதைய பிரச்னை அல்ல; நடுநிலையான ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பதற்கான பிரச்னை மட்டுமே உள்ளது.

டி20 போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது.

​ஒரு நடுநிலையான இடத்தில் போட்டியை நடத்தலாம் என்பதில் தெளிவாக உள்ளோம். இந்தியா ஆசிய கோப்பையில் பங்கேற்க வேண்டுமென்றால், அது பாகிஸ்தானில் இருக்கக் கூடாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒரு நடுநிலையான இடத்தில் போட்டியை நடத்த முடியும். ஏற்கனவே 2018ல் பிசிசிஐ செய்துள்ளது’ என்றார்.

முன்னதாக பல்வேறு பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு இடையே, 2019ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரு முழுத் தொடரையும் விளையாடியது.

பங்களாதேஷ் தற்போது மூன்று டி 20 போட்டிகளில் விளையாடிய நிலையில்.

அவர்கள் பிப். 7 முதல் 11ம் தேதி வரை டெஸ்ட் போட்டிகளில் லாகூரில் விளையாடுகின்றனர்.

பின்னர் ஏப். 5 முதல் 9ம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் டி20 ஆசிய கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தரப்பு ‘செக்’ வைத்து வருவதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் குழப்பத்தில் உள்ளது.

.

மூலக்கதை