ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி

ஹாமில்டன்: உலகக்கோப்பைப் போட்டிக்கு பின்னர் இந்திய வீரர் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் இந்திய அணி பங்கேற்ற தொடர்களில் அவர் விளையாடவில்ைல; அணியிலும் சேர்க்கவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணியிலும் தோனி இடம்பெறாத நிலையில், இந்திய வீரர் சாஹலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சக வீரர்கள் பேருந்தில் செல்லும் போது ஒவ்வொரு வீரரிடமும் சென்று பேசிக்கொண்டே வந்த சாஹல், இறுதியில் பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்றார்.

அந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்த அவர், ‘‘இது தோனியின் சீட்; இதில் நாங்கள் யாரும் அமர மாட்டோம். இந்த இடம் அவருக்கானது.

நாங்கள் அவரை மிஸ் செய்கிறோம்’’ என்றார். தோனியை களத்தில் எப்போது பார்க்கலாம் என்று ஏற்கனவே எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு சாஹலின் வீடியோ பதிவு நெகிழ்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.

இந்த வீடியோவை தோனியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

.

மூலக்கதை