100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து

ஐதராபாத்: சர்வதேச பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து, தற்போது பிரீமியர் பேட்மிண்டன் லீக்கில் (பிபிஎல்) ஐதராபாத் ஹண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒலிம்பிக்கிற்கு முன்பு, இரண்டு போட்டிகள் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

பிபிஎல் போட்டி முற்றிலும் மாறுபட்ட அனுபவம். வெற்றி அல்லது தோல்வி என்பது ஒரு பொருட்டல்ல; ஏனெனில் வீரர்கள் தங்களை 100 சதவீதம் விளையாட்டுக்காக அர்ப்பணிக்கிறார்கள்.நாங்கள் சிலவற்றை வென்றும், சில போட்டிகளில் தோற்றும் உள்ளோம். எங்கள் அணி வீரர்கள் 100 சதவீதத்தை கொடுத்தார்கள்.

அதன்பின், வெற்றி அல்லது தோல்வி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று நினைக்கிறேன்.

விளையாட்டில் வீரர்கள் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பது மிகவும் முக்கியமானது” என்றார்.

.

மூலக்கதை