எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்

கராச்சி: பாகிஸ்தானின் யு-19 அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹைதர் அலி, இந்திய வீரர் ரோஹித் சர்மாவைப் பின்பற்ற விரும்புவதாகவும், அவரைப் போல இரட்டை சதம் அடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஒரு துணிச்சலான வீரர்.

எனது முன்மாதிரி ரோஹித் சர்மாதான். நான் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்.

அவர் மிகவும் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் பேட்ஸ் செய்கிறார். அவரது பேட்டிங் பாணியை பின்பற்ற விரும்புகிறேன்.

ஒரு தொடக்க வீரராக, அதிகபட்ச ரன்களை எடுக்க விரும்புகிறேன்.

இதனால் அணியில் வலுவான இடத்தை பெற முடியும்’’ என்றார். முன்னதாக, ஹைதர் அலி கடந்த ஆண்டு தனது முதல் தர போட்டிகளில் அறிமுகமானார்.

அவர் 13 இன்னிங்ஸ்களில் 654 ரன்கள் எடுத்தார். 19 வயதான பேட்ஸ்மேன் ஹைதர் அலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காலிறுதி ேபாட்டியில் நுழைய தயாராகி வருகிறார்.

யு 19 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்காக சிறந்த பங்களிப்பை அளிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.

.

மூலக்கதை