கொரிய தமிழ்ச்சங்கத்தின் கோலாகலாமான பொங்கல் விழா..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கொரிய தமிழ்ச்சங்கத்தின் கோலாகலாமான பொங்கல் விழா..

கொரிய தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா சனவரி 27 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கொரியாவிற்கான இந்திய துணைத்தூதர் மாண்புமிகு சதிஷ் குமார் சிவன் அவர்கள் கலந்துகொண்டார். பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்த தூதர் அவர்கள், தூதரகம் மற்றும் இந்திய அரசின் சார்பில் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொரிய தமிழ்ச் சங்கம் வடிவமைத்து உருவாக்கிய மாத நாட்காட்டியை தூதர் அவர்கள் வெளியிட மகளீர் பெற்றுக்கொண்டனர். அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்த விஞ்ஞானிகள் இருவரை தூதர் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். குறிப்பாக தூதரகம் இங்குள்ள இந்திய மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றி தெரிவித்த தூதர் மே-2020-ல் அனுசரணை வழங்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் மக்களுக்கு அறியத்தந்தார். பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட தூதர் அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகின் சார்பிலும் கொரியாவாழ் தமிழ் மக்களின் சார்பிலும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மகளீர் பங்களிப்பே தமிழ் சமூகத்தின் பலம், கொரிய தமிழ்ச் சங்கத்தின் பலம். இம்முறை நிகழ்ச்சி உள்ளீடுகள்-மேடை ஆளுமை அனைத்தும் மகளீரே செய்தனர். திறம்பட ஒருங்கிணைத்த அனைத்து மகளீருக்கும் சங்கத்தின் நன்றிகளும்..பாராட்டுக்களும். புகைப்பட ஒருங்கிணைப்பை கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயலர் முனைவர் இராமன் குருசாமி அவர்கள் மற்றும் பொறியாளர் மு. ஆனந்த் ஆகியோர் காலையிலிருந்து மாலைவரை அயராது செய்தனர் என்பது பாராட்டுகளுடன் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை