துபாய் தமிழ் குடும்பங்களின் சார்பாக பொங்கல் விழா 2020

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
துபாய் தமிழ் குடும்பங்களின் சார்பாக பொங்கல் விழா 2020

எமது குழுவின் பெயர் ஓடி விளையாடு. கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. குழுவின் நோக்கம் அயல் நாட்டில் வசித்தாலும் நமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்ப்பதாகும். இதன்பொருட்டு இவ்வாண்டின் பொங்கல் விழா சனவரி 17, வெள்ளிக்கிழமை துபாய் முஷ்ரிப் பூங்காவில் கொண்டாடப்பட்டது. காலை பொதுப்பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடப்பட்டது. விழாவில் கோலப்போட்டி, பூ கட்டுதல், கல்லாங்காய் மற்றும் பல விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல், மஞ்சள் தண்ணீர் ஊற்றும், லெமன் ஸ்பூன் ஓட்டம், கயிறு இழுத்தல் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், தம்பதியர் விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "ழ" பயில்வோம் தமிழ் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடணம், பாட்டு, நாடகம், பட்டிமன்றம் முதலுய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற அணைவருக்கும பரிசுகள் வழங்கப்பட்டு விழா இனிதெ நிறைவுற்றது.
விழா ஏற்பாட்டாளர்கள் செந்தில் - கலையரசி, ராபர்ட்- பிரியா, முத்து-ஷிகா மற்றும் குழு உறவுகள்.

 

துபாயிலிருந்து கலையரசி செந்தில்..

மூலக்கதை