பசுமை படையில்! பசுமை தோட்டம் அமைப்பதில் ... பட்டையை கிளப்பும் அரசு பள்ளி

தினமலர்  தினமலர்
பசுமை படையில்! பசுமை தோட்டம் அமைப்பதில் ... பட்டையை கிளப்பும் அரசு பள்ளி

எண்ணுார் : பசுமை படை தோட்டம் அமைப்பதில், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அசத்தி வருகின்றனர்.

எண்ணுார், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 3,000க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், மூன்று மாதங்களுக்கு முன், பசுமைப்படை அமைக்கப்பட்டது.ஆர்வமுள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து, பசுமைப்படை தோட்டம் உருவாக்கினர். இதில், வெண்டை, பூசணி, கத்தரி, பீர்க்கங்காய், பாகற்காய், முருங்கை, மிளகாய், மாதுளை, வாழை, நெல்லி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு உள்ளன.தவிர, மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்பூர வல்லி, கீழாநெல்லி, துாதுவளை, வேம்பு, பிரண்டை, குப்பைமேனி உள்ளிட்ட தாவர வகைகளும் தோட்டத்தில் உள்ளன. பசுமை படை மாணவர்கள், தோட்டத்திற்கு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி, பராமரித்து வருகின்றனர்.விடுமுறை தினங்களில், ஆடு, மாடுகள் தோட்டத்தை சேதப்படுத்தாமல் இருக்க, பள்ளியில் வீணான ஜன்னல், கதவுகளால், தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ளனர்.

தோட்டத்திற்கு அழகு சேர்க்கும் வகையில், மாணவி மெர்லின், தோட்டத்தில் பட்ரோஸ் பூச்செடியை நட்டு, பராமரித்து வருகிறார்.கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், செயல்முறை கல்வியாக, தோட்டம் அமைத்து பராமரிப்பது, அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்று முறை காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு, சத்துணவிற்கு வழங்கப்பட்டு உள்ளன.பள்ளி வளாகத்தில் சேகரமாகும் மக்கும் குப்பையை பதப்படுத்தி, இயற்கை உரம் தயாரித்து, செடிகளுக்கு பயன்படுத்துவது கூடுதல் சிறப்பு.கரடு முரடாக கிடந்த இப்பகுதியை, மாணவர் பசுமை படையினர், சமன்படுத்தி, காய்கறி, மருத்துவ குணங்கள் நிறைந்த, செடிகளை பயிரிட்டு பராமரித்து வருகிறோம்.

தோட்டத்திற்கு, ஒவ்வொரு மாணவரும், ஒரு விதை போட்டுள்ளனர். இதனால், எங்களிடையே ஒருங்கிணைப்பு பண்பு மேம்பட்டு உள்ளது. வெறுமனே, மனப்பாடமின்றி, இதுபோன்ற பசுமையான செயல்முறை கல்வியால், புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எங்களை பார்த்து, மேலும் பல மாணவர்கள், பசுமை படையில் சேர, ஆர்வம் காட்டி வருகின்றனர். பி.ஜனனி, 8ம் வகுப்பு, எண்ணுார்உடற்கல்வி ஆசிரியர், பசுமை படைக்கும், மாணவர்களை அழைத்ததும் ஆர்வம் மிகுதியாக இருந்தது; நானும் சேர்ந்துக் கொண்டேன்.

தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் பசுமைப்படையை பராமரிக்கும் பணியில், சுழற்சி முறையில் மேற்கொள்வோம்.எங்கள் முயற்சியால் விளைவிக்கப்பட்ட, வெண்டை, கத்தரி, மிளகாய், பீர்க்கங்காய், பாகற்காய்களை, சத்துணவில் கொடுத்து, உணவில் சேர்த்தது, மிகவும் உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது. அரசு பள்ளியில், படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பர். இங்கு, விளையாட்டு, பசுமைப்படை என, மாணவர்களுக்கு பல்வேறு தளங்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன.வி.டேனியல், 7ம் வகுப்பு, எண்ணுார்

மூலக்கதை