ஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது

தினகரன்  தினகரன்
ஸ்மார்ட் சிட்டி ரேங்க் கார்டு ஜூனில் வெளியாகிறது

விசாகப்பட்டினம்: ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள், 3 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம், நகர நிர்வாகத்திறன் புள்ளி, அங்குள்ள சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான தரவரிசை வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தின் இயக்குநர் குணால் குமார் தெரிவித்தார். ஐதராபாத்தில் நேற்று அவர் அளித்த பேட்டியின்போது இதை தெரிவித்தார். இந்த தரவரிசை மூலம் நகரங்கள் சிறப்பான திட்டங்களை வகுக்க முடிவதுடன், தகவல் அடிப்படையிலான நிர்வாகத்தை நோக்கி நடைபோடவும் முடியும் என்றும்  கூறினார்.

மூலக்கதை