சீனாவை புரட்டிய கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106ஆக உயர்வு; புதிதாக 1300 பேர் பாதிப்பு...சீன அரசு தகவல்

தினகரன்  தினகரன்
சீனாவை புரட்டிய கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106ஆக உயர்வு; புதிதாக 1300 பேர் பாதிப்பு...சீன அரசு தகவல்

பீஜிங்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் சமீபத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடல்  உணவு, வனவிலங்கு சந்தையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வைரஸ் சீனாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை 80 ஆக இருந்தது. இந்நிலையில்   பீஜிங்கில் ஒருவர் உயிரிழந் ததை அடுத்து 106ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 30 சதவீதம் உயர்ந்து 2,744 ஆகியுள்ளது. தற்போது, புதிதாக 1300 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 106 பேர் இறந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருகின்றன.  இந்நிலையில், கேரளா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 4 பேருக்கும், கொல்கத்தாவில் சீன பெண் பயணி ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, தனி வார்டில் தீவிர  சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை