ஐபிஎல் சூதாட்ட வழக்கு தண்டனை விவரங்கள் தொடர்பாக மெய்யப்பன், ராஜ்குந்ராவுக்கு நோட்டீஸ்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஐபிஎல் சூதாட்ட வழக்கு தண்டனை விவரங்கள் தொடர்பாக மெய்யப்பன், ராஜ்குந்ராவுக்கு நோட்டீஸ்

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தண்டனை விவரங்களை முடிவு செய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழு , விளக்கம் கேட்டு குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெய்யப்பனும், ராஜ்குந்ராவும் எது மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதும், அவற்றின் தன்மை பற்றியும் தெரிந்தால் தான், தண்டனையை முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கபட்டுள்ள ஆர்.எம். லோதா தலைமையிலான குழு கூறியுள்ளது.

 

மூலக்கதை