43 ரன்னில் சுருண்டது ஜப்பான் | ஜனவரி 25, 2020

தினமலர்  தினமலர்
43 ரன்னில் சுருண்டது ஜப்பான் | ஜனவரி 25, 2020

புளோயம்போன்டைன்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஏமாற்றிய ஜப்பான் அணி 43 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி எளிய வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை அணி, கத்துக்குட்டியான ஜப்பானை எதிர் கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணிக்கு கேப்டன் மார்கஸ் டக் அவுட்டானார். டெபாசிஸ் (9), இஷான் (4) நிலைக்கவில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை எட்டவில்லை. ஜப்பான் 18.3 ஓவரில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணிக்கு நவோத் 9 ரன்கள் எடுத்தார். முகமது சமாஷ் (7*), ரவிண்டு (19*) கைகொடுக்க அணி 8.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து வெற்றி

கிம்பெர்லேயில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் நைஜீரியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நைஜீரியா அணிக்கு கேப்டன் ஸ்லிவெஸ்டர் (16) மட்டும் ஆறுதல் தந்தார். நைஜீரியா 27.5 ஓவரில் 58 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணிக்கு சாம் யங் (39*), ஜார்ஜ் (7*) பங்களிப்பு தர, 11 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை