தொடரை வென்றது பாக்., | ஜனவரி 25, 2020

தினமலர்  தினமலர்
தொடரை வென்றது பாக்., | ஜனவரி 25, 2020

லாகூர்: பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி லாகூரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். முகமது நயீம் டக் அவுட்டானார். மெகதி ஹசன் (9), லிட்டன் தாஸ் (8) ஒற்றை இலக்கில் திரும்பினர். கேப்டன் மகமதுல்லா (12) அணியை கைவிட்டார். தமிம் இக்பால் (65) மட்டும் அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. சவுமியா சர்கார் (5), அமினுல் இஸ்லாம் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹபீஸ் அரை சதம்

எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஆஷன் அலி (0) ஏமாற்றினார். கேப்டன் பாபர் ஆசம், முகமது ஹபீஸ் இணைந்து அசத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர். பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஆசம் (66), ஹபீஸ் (67) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து, ஒரு போட்டி (ஜன. 27) மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி 2–0 என தொடரை வென்றது.

மூலக்கதை