இந்திய அணி வரணும்: அடம் பிடிக்கும் பாக்., | ஜனவரி 25, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணி வரணும்: அடம் பிடிக்கும் பாக்., | ஜனவரி 25, 2020

கராச்சி: ‘‘எங்கள் மண்ணில் நடக்கவுள்ள ஆசிய கோப்பையை இந்திய அணி புறக்கணித்தால், அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட மாட்டோம்,’’ என, பி.சி.பி., தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2012–13ல் மோதின. இந்திய மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி 2–1 என வென்றது. இதன்பின், எல்லையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் பங்கேற்பது இல்லை. ஐ.சி.சி., தொடர்களில் மட்டும் மோதுகின்றன. இதற்கிடையே, வரும் செப்டம்பரில் பாகிஸ்தான் மண்ணில் ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்க வாய்ப்பு இல்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கூறுகையில்,‘‘ வரும் செப்டம்பரில் எங்கள் மண்ணில் ஆசிய கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்க வேண்டும். தவறினால், இந்தியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் (2021) நாங்கள் விளையாட மாட்டோம். இத்தொரை நடத்தும் உரிமையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வழங்கி உள்ளது. இதை மாற்ற ஐ.சி.சி.,யால் முடியாது. 2023 முதல் 2031 வரை குறைந்தபட்சம் மூன்று ஐ.சி.சி., தொடர்களை எங்கள் மண்ணில் நடத்த முயற்சி செய்வோம்,’’ என்றார்.

மூலக்கதை