இங்கிலாந்து அணி அசத்தல் | ஜனவரி 25, 2020

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணி அசத்தல் | ஜனவரி 25, 2020

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்காவது டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் ஜோ ரூட் (59), போப் (56) அரை சதம் கடந்தனர். வோக்சை (32) வெளியேற்றிய நார்ட்ஜே, ஐந்தாவது விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தென் ஆப்ரிக்க அணிக்கு எல்கர் (26), மாலன் (15) நிலைக்கவில்லை. துசென் (0), கேப்டன் டுபிளசி (3) ஏமாற்றினர். ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து, 312 ரன்கள் பின்தங்கி இருந்தது. குயின்டன் (32) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஸ்டோக்சுக்கு அபராதம்

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து, ‘பெவிலியன்’ திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் இவரை விமர்சனம் செய்தார். கோபப்பட்ட ஸ்டோக்ஸ்,’ மைதானத்தில் வெளியே வந்து இதை தெரிவிக்க முடியுமா,’ என, சீறினார். இதற்காக, இவரின் போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு அபராத புள்ளியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ளது.

 

 

 

 

 

 

மூலக்கதை