அரை நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை சாந்தி திரையரங்கம் சீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம், அக்சயா என்ற

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
அரை நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை சாந்தி திரையரங்கம் சீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம், அக்சயா என்ற

அரை நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை சாந்தி திரையரங்கம் சீரமைக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படவுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம், அக்சயா என்ற தனியார் நிறுவனத்திற்கும், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கும் இடையே கையெழுத்தானது.

அண்ணாசாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சாந்தி திரையரங்க வளாகம் தற்காலத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட இருப்பதாக அக்சயா நிறுவனத் தலைவர் சிட்டிபாபு தெரிவித்தார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

சீரமைப்புக்குப் பிறகும் சாந்தி திரையரங்கம் தொடரும் எனவும், இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் சிட்டிபாபு தெரிவித்துள்ளார். அதுவரை திரையரங்கில் திரைப்படம் தொடர்ந்து திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை