சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்

பீஜிங்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த தலா ஒருவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையைச் சேர்ந்த 2 பேருக்கு புனே ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.



சீனாவில் வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால், இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் நாடு திரும்பி உள்ளனர். கேரளா திரும்பிய உள்ள நிலையில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதால் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் வீடுகளுக்கு சென்றுள்ள 73 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நபர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எம்ய்ஸ் மற்றும் மும்பை அரசு மருத்துவமனைகளில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.



சீனாவின் வைரஸ் தாக்குதல் ஹாங்காங், மக்காவ், தைவான், நேபாளம், ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொடர்ந்து சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கிழக்கு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் 237  பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


.

மூலக்கதை