சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

வியன்னா: ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் மேட்டன் கோப்பை சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், ஏஸ் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான அபூர்வி சண்டேலா மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வார் தங்கம் வென்றனர். அபூர்வி மகளிர் 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதலில் 251. 4 என்ற இறுதி மதிப்பெண்ணுடன் தங்கம் வென்றார்.

அதே நிகழ்வில் அஞ்சும் மவுட்கில் 229 மதிப்பெண் எடுத்து வெண்கலம் வென்றார். ஆண்களின் 10 மீ ஏர் துப்பாக்கி சுடுதலில், திவ்யான்ஷ் இறுதி மதிப்பெண் 249. 7 உடன் முதலிடத்தைப் பெற்றார்.

தீபக் குமார் 228 மதிப்பெண்களுடன் வெண்கலம் பெற்றார்.

நான்கு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களும் ஏற்கனவே டோக்கியோ விளையாட்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

டோக்கியோ 2020 போட்டிக்கான ஒலிம்பிக் ஒதுக்கீட்டை அஞ்சும், அபூர்வியும் வென்றனர். 2019ம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடந்த ஐ. எஸ். எஸ். எஃப் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் திவ்யான்ஷ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றார்.

தோஹாவில் நடந்த 14வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற பின்னர் தீபக்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 24ம் முதல் தொடங்குகிறது.

.

மூலக்கதை