அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு

ராவல்பிண்டி:  பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வென்றதை வெகுவாக பாராட்டி உள்ளார். அக்தர் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில், மும்பையில் நடந்த தொடரின் முதல் போட்டியில் வீழ்த்தப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘டீம் இந்தியா’-வின் ஆதிக்கம் நன்றாக இருந்தது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, அற்புதமாக விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உதவினர்.

பெங்களூருவில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் வெல்ல கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் ெகாடுத்தனர்.

நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரில், ஸ்ரேயாஸ் ஐயர் வரும்காலத்தில் இந்திய அணியின் சொத்தாக இருக்க முடியும். தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.

ஆனால் அவரை தோனிக்கு மாற்றாக அழைப்பது தோனியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பல நெருக்கடி ஆட்டங்களில் அணி வெற்றிபெற தோனி உதவியுள்ளார் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை