கிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கிழக்கு வங்கம் கால்பந்து அணியின் ஸ்பெயின் தலைமை பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ மெனண்டெஸ், தனது பதவியில் இருந்து திடீரென விலகினார். அவரது அணி ஐ-லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால், இந்த முடிவை எடுத்துள்ளார்.

கிழக்கு வங்கம் அணி ஐ-லீக் அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா டெர்பியில் பரம எதிரிகளான மோஹுன் பாகனுக்கு எதிரான கடைசி  ஆட்டம் உட்பட தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களை கிழக்கு வங்கம் இழந்துள்ளது.தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய அலெஜான்ட்ரோ மெனண்டெஸ் கூறுகையில், ‘‘தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் அணியின் வளர்ச்சிக்காக நான் மேற்கொண்ட பணியை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய தலைமை தேவைப்படுகிறது.

அணியுடன் எனது காலத்தை நான் ரசித்தேன்.

அணி மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்’’ என்றார்.

.

மூலக்கதை