புல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு

புதுடெல்லி: மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அகில இந்திய விளையாட்டு கவுன்சிலின் (ஏ. ஐ. சி. எஸ்) ஆலோசனைக் குழு, 2015 டிசம்பரில் சர்பானந்தா சோனோவால் விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் பைச்சுங் பூட்டியா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் சதுரங்க உலக சாம்பியன்  விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் குழுவில் இருந்தும், பல்வேறு காரணங்களால் குழுவில் இருந்து அவர்கள் விலகினர்.

அதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கை 27ல் இருந்து 18  ஆக குறைக்கப்பட்டது. புதிய உறுப்பினர்களாக  கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் காந்த்  ஆகியோருடன் லிம்பா ராம் (வில்வித்தை), பி. டி. உஷா (தடகள), பச்சேந்திரி பால்  (மலையேறுதல்), தீபா மாலிக் (பாரா-தடகள), அஞ்சலி பகவத் (துப்பாக்கி சுடுதல்), ரென்டி சிங் (கால்பந்து) மற்றும் யோகேஸ்வர் தத் (மல்யுத்தம்) ஆகியோர் இடம் பெற்றனர்.புதிய உறுப்பினர்களின் பட்டியலில் உள்ள இந்திய பேட்மிண்டன் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் குறிப்பிடத்தக்கவர். ஆனால் இவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கி வருவதால், ஏ. ஐ. சி. எஸ் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்று 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சகத்துக்கு தெரிவித்துவிட்டதாக கோபிசந்த் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இது ஒலிம்பிக் ஆண்டு என்பதால், ஏ. ஐ. சி. எஸ் கூட்டங்களில் கலந்துகொள்வது எனக்கு சாத்தியமில்லை என்று நான்கு மாதங்களுக்கு முன்பே அமைச்சகத்துக்கு தெரிவித்துவிட்ேடன்” என்றார்.

.

மூலக்கதை