காயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க..! வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க..! வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்

மும்பை: பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடும் போது ஷிகர் தவானுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. விதர்பாவுக்கு எதிரான டெல்லியின் ரஞ்சி டிராபி போட்டியின் போது, இஷாந்த் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

டெல்லிக்கு எதிரான வங்காள ரஞ்சி டிராபி மோதலில் ரிந்திமன் சஹா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விரலில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் சேர்க்கப்படாத நிலையில், தற்போது அவர் ரஞ்சிக்கு வருகிறார்.

இருப்பினும், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான அவரை ரஞ்சி ஆட்டத்தில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுள்ளது.
இதுகுறித்து வங்காள பயிற்சியாளர் அருண் லால் கூறுகையில், “டெல்லி போட்டிக்கு சஹா ஆடமாட்டார்.

பிசிசிஐ அவரை வேண்டாம் என்று கூறியுள்ளது’’ என்றார்.

காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காத சஹா, சமீபத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என். சி. ஏ) மறுவாழ்வு பெற்றார்.

ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு பி. சி. சி. ஐ வீரர்களுக்கு விதிவிலக்கு அளிப்பது இது முதல்முறை அல்ல. இந்த ஆண்டு இலங்கைத் தொடருக்கு முன் இந்திய அணியில் மீண்டும் களமிறங்கும் போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, ரஞ்சி டிராபியில் தனது உடற்திறனை நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டது.

இந்தியா தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை ஜன. 24 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20-ஐ தொடரைத் தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து பிப். 5 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், பிப்.

21 முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும்.

அதையடுத்து, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சஹா பொருத்தமாக  இருப்பதை உறுதி செய்வதற்காக டெல்லிக்கு எதிரான வங்காளத்தின் அடுத்த ரஞ்சி  டிராபி மோதலைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை