கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேயாடு பகுதியை சேர்ந்தவர் முகமது இக்பால் (54).

இவர் அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வந்தார். பேயாடு மண்டல காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.

இதுதவிர காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி மாவட்ட துணைத்தலைவராகவும் பணியாற்றினார். நேற்று காலை வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றவர் பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடிவந்தனர்.

இந்த நிலையில் காலை சுமார் 11 மணியளவில் அந்த பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு தொண்டர்கள் வந்தனர்.

அப்போது அலுவலக கதவு திறந்த நிலையில் காணப்பட்டது. அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது முகமது இக்பால் தூக்குபோட்டு இறந்துகிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மலையின்கீழ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் ‘எனது சாவுக்கு யாரும் காரணமில்லை.

வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்ேடன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

முகமது இக்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேயோடு பகுதியில் வீடு கட்டியிருந்தார். கடன் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விற்று விட்டு குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அப்போதும் கடன் தொல்லை இருந்து வந்ததாக தெரிகிறது, கடன் தொல்லையே அவரது தற்கொலைக்கு காரணம் என்று போலீசார் கருதுகின்றனர்.

.

மூலக்கதை