டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து ரூ1.3 கோடி அதிகரிப்பு: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து ரூ1.3 கோடி அதிகரிப்பு: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சொத்து ரூ1. 3 கோடி அதிகரித்துள்ளதாக, அவர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ரூ. 3. 4 கோடி சொத்து உள்ளதாக தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிட்ட போது தனது சொத்து மதிப்பாக ரூ. 2. 1 கோடியை கணக்கில் காட்டி இருந்தார்.

தற்போது, 1. 3 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் ரொக்கம் மற்றும் நிலையான வைப்பு தொகை ரூ. 15 லட்சமாக இருந்தது.

2020ல் ரூ. 57 லட்சமாக அதிகரித்துள்ளது.

முதல்வர் கெஜ்ரிவாலின் ரொக்கம் மற்றும் நிலையான வைப்பு தொகை 2015ல் ரூ. 2. 26 லட்சத்திலிருந்து 2020ல் ரூ. 9. 65 லட்சமாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் அசையாச் சொத்துகளின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

அதேநேரம் கெஜ்ரிவாலின் அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 92 லட்சத்திலிருந்து ரூ. 177 லட்சமாக அதிகரித்துள்ளது. கெஜ்ரிவாலின் அசையா சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பது என்பது 2015ம் ஆண்டில் இருந்த அதே சொத்துதான்.

இருந்தாலும், இன்றைய நிலையில் சொத்தின் மதிப்பு கூடியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்த முதல்வர் கெஜ்ரிவால், அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தில் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.

வருகிற பிப். 8ம் தேதி டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடப்பதால் ேதர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.


.

மூலக்கதை