வருமானத்துக்கு அதிகமாக ரூ4 கோடி சொத்து: சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருமானத்துக்கு அதிகமாக ரூ4 கோடி சொத்து: சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவு

சூலூர்: வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இந்த வழக்குத்தான் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காளிவேலாம்பட்டி, பட்டாசி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (52). இவர், அப்பகுதியில் தறிக்குடோன் நடத்தி வருகிறார்.

இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர், தொழில் சம்பந்தமான வரவு, செலவு தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது பல்லடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த தங்கராஜ், கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி தீர்வு கண்டுள்ளார்.

இந்த தீர்வில் திருப்தி அடையாத கந்தசாமி, தனக்கு இன்ஸ்பெக்டர் அநீதி இழைத்து விட்டதாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு முதல் மாவட்ட, மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனிடையே பல்லடத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த தங்கராஜ், சூலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கூறி கந்தசாமி, லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார். அரசு அதிகாரி மீது லோக் ஆயுக்தாவில் இந்த ஆண்டின் முதல் புகாராக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ரசீது, லோக் ஆயுக்தாவில் இருந்து கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை