வைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை: தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு வந்த அதிமுக எம்பி வைத்திலிங்கத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை கீழவாசலில் நேற்றிரவு எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் கேள்வி கேட்க அப்பகுதி இஸ்லாமியர்கள் திரண்டிருந்தனர். திடீரென ஆட்டுமந்தை தெரு வழியாக வந்த 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை போலீசார் அரசமரம் அருகே தடுத்து நிறுத்தினர்.

இதன்பிறகு அதிரடிப்படை போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தடுத்து விரட்டினர்.

ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்த இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்த வைத்திலிங்கத்திடம் அது குறித்து கேள்வி கேட்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்க மறுத்த காரணத்தால் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பிறகு அதிமுக கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

.

மூலக்கதை