சென்னை நகரில் குப்பைகளை உருவாக்கினால் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
சென்னை நகரில் குப்பைகளை உருவாக்கினால் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை நகரில் குப்பைகளை உருவாக்கினால் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடியிருப்பு, வணிக வளாகம், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியாக கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, எச்சில் துப்புவது, குப்பை எரித்தல்  போன்றவைகளுக்கு அபராதம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. குப்பைகளை உருவாக்கினால் கட்டணம் வசூலிக்கும் முறை சென்னை மாநகராட்சியில் 3 மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

மூலக்கதை