பொய் வழக்கில் கைது செய்வதாக மிரட்டல் விடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொய் வழக்கில் கைது செய்வதாக மிரட்டல் விடுத்த சப்இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பொய் வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த ராஜசேகர், திலகவதி தம்பதி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த  மனுவில், திருப்பூர் ஆண்டிபாளையத்தில், எங்கள் வீட்டின் அருகே, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த  விஜயமோகன் என்பவர் வீடு கட்டி வந்தார்.

அவர் வீட்டை அனுமதி பெற்றபடி கட்டாமல், விதிகளை மீறி கட்டி வந்தார்.

இது குறித்து நாங்கள்  கேட்டோம்.

அதற்கு, அவர் எங்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு வழிகளில் மிரட்டல் விடுத்தார். எங்கள் மீது பொய் வழக்குபதிவு செய்து சிறையில்  அடைப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால், அவரது மிரட்டலுக்கு பயந்து எங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க யாரும் முன்வருவதில்லை. எனவே, சப்-இன்ஸ்பெக்டர் விஜயமோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சித்ரஞ்சன்  மோகன்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சாட்சி மற்றும் ஆவணங்களை வைத்து  பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் விஜயமோகன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

இதற்காக அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்  விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூல் செய்து  கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

.

மூலக்கதை