பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள்: புகைப்படங்களை கொண்டு இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் 3 மாகாணங்களில் புதிதாக பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிதாக ஏராளமான முகாம்கள் கட்டப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்ஹவா உள்ளிட்ட 3 மாகாணங்களில் செயற்கைக்கோள் மூலம் படங்கள் எடுக்கப்பட்டது. இதனை இந்திய உளவு அமைப்புகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, பாகிஸ்தான் இளைஞர்களுக்கு பயற்சி அளிக்கும் விதமாக அப்பகுதிகளில் புதிதாக ஏராளமான முகாம்களை நவீன வசதிகளுடன் பாகிஸ்தான் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு முகாம்களிலும் 700 பேர் வரை பயிற்சி பெற முடியும் என்பதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்தன. இதனை தொடர்ந்து, முகாம்களில் இருப்போரில் 92 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதையும், அதிலும் 12 சதவீதம் பேர் சிறுவர்கள் என்பதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை