ஹெல்மெட் அணியாமல் 'பறப்பது இது, 'கெத்து' பாஸ்!பெற்றோர் காத்திருப்பதை மறப்பது...!

தினமலர்  தினமலர்
ஹெல்மெட் அணியாமல் பறப்பது இது, கெத்து பாஸ்!பெற்றோர் காத்திருப்பதை மறப்பது...!

கோவை:-ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு வாரம், தவறாமல் அனுசரிக்கப்படுகிறது. 'அவங்க பாட்டுக்கு அனுசரிச்சுட்டு போகட்டும்...அதுக்காக நாம, நம்ம 'கெத்தை' விட முடியுமா' எனும் தோரணையில், பல இளைஞர்கள் ெஹல்மெட் அணியாமலே சாலையில் 'பறக்கின்றனர்'.கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள, பீளமேடு பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.
அந்தளவுக்கு அவிநாசி சாலையில், விதிமீறல்களில் இளைஞர்கள் விளையாடுகின்றனர்.'வாகனம் ஓட்டும்போது, ஹெல்மெட், சீட்பெல்ட், உரிய ஆவணங்கள் கட்டாயம், மது அருந்தி விட்டோ, போன் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்...' என்றெல்லாம், கூப்பாடு போட்டு கூறினாலும், சாலை பாதுகாப்பின் அவசியம், அனாவசியம் என்று எண்ணும் கூட்டமே இந்த சாலையில் அதிகம்.இவர்களை பொறுத்தவரை, 'ெஹல்மெட் அணிவது, மெதுவாக வாகனத்தை இயக்குவது, வண்டியில் 'ரியர்வியூ' கண்ணாடி வைத்துக் கொள்வது...' இதெல்லாம் பெரிய அவமானம்; 'கெத்து' போய் விடும்.ஒரு காசுக்கும் ஆகாத இந்த 'கெத்தை', பெரிய சொத்து போல் 'மெயின்டெய்ன்' பண்ணுகின்றனர்...
ஒரு விபத்து நடந்து திருந்தும் வரை! இளைஞர்களுக்கு சற்றும் குறையாத சாகசத்தில், பெண்களும்ஈடுபடுகின்றனர்.இவர்கள் ஏற்படுத்தும் விபத்து, இவர்களோடு நின்று விடுவதில்லை. ஒழுங்காக சாலை விதிகளை கடைபிடிக்கும் பிறரும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் வேதனை.கடுமையான அபராதம் காத்திருக்கிறது என்று தெரிந்தும், தவறு செய்பவர்கள் மீது, போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுததால் மட்டுமே, விபத்தில்லா கோவையை உருவாக்க முடியும்.

மூலக்கதை