24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்..! பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்..! பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி

டாக்கா: கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் சென்று விளையாட சில அணிகள் மறுப்புதெரிவித்து வருகின்றன. அதேபோல வங்காளதேச அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டி வந்தது.

ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக பாகிஸ்தான் செல்ல வங்காளதேசம் அணி சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ஜன. 24, 25, 27  (மூன்று டி20) லாகூரில் நடக்க உள்ளன.

மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே பிப். 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ராவல்பிண்டியிலும், ஏப்.

5ம் தேதி முதல் 9ம் தேதி வரை கராச்சியிலும் நடக்க உள்ளன.

ஒரே ஒரு ஒருநாள் போட்டி ஏப்.

3ம் தேதி கராச்சியில் நடைபெறுகிறது. இருந்தும், மூத்த பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் பேக்ரூம்  ஊழியர்களில் பலர், பேட்டிங் பயிற்சியாளர் நீல் மெக்கென்சி, ஸ்பின்  பந்துவீச்சு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்  ரியான் குக் ஆகியோர் சுற்றுப்பயணத்தில் சேர மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே வங்கதேச பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘நீங்கள் ஒரு பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும்போது பந்தைத் தவிர வேறு எதுவும் யோசிக்க வேண்டியதில்லை. நீங்கள் பந்துவீசும்போது சரியான இடத்தில் பந்தை தரையிறக்குவதைத் தவிர வேறு எதுவும் யோசிக்க முடியாது.கடும் பாதுகாப்பு அணியை ஊக்குவிக்கும். நாங்கள் எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் என்பது எங்கள் முடிவு அல்ல.

நான் பாகிஸ்தானுக்கு செல்வதை எதிர்நோக்குகிறேன். நான் அங்கு இருந்ததில்லை.

அந்த நாட்டில் கிரிக்கெட் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் ஒரு நல்ல சவால் இருக்கும். ஒரு நல்ல சாகசத்தை காண விரும்புகிறேன்.

பாதுகாப்பு அச்சங்கள் இருந்தபோதிலும் பாகிஸ்தானில் வங்கதேசம் சிறப்பாக செயல்பட முடியும்.

சில வீரர்கள், பயிற்சியாளர்கள் இடம்பெறாத நிலையில், அவர்களின் முடிவை மதிக்கிறேன்’’ என்றார்.

.

மூலக்கதை