ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க..! மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி யு19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க..! மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா

புளோயம்போன்டீன்: தென்னாப்பிரிக்காவின் புளோயம்போன்டீனில் நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்தியா யு-19 அணி இலங்கை யு-19 அணிக்கு எதிராக 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மத்தீஷா பதிரானா, அன்றைய போட்டியில் தலைப்பு செய்திகளாக உருவெடுத்தார்.

ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இது மணிக்கு 175 கி. மீ (108 மைல்) வேகத்தில் அவரது பந்து வீச்சு பதிவு செய்யப்பட்டதுதான். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை வீசப்பட்ட வேகமான பதிவு செய்யப்பட்ட பந்து என்றே கூறுகின்றனர்.



போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், பதிரானாவின் பந்து வீச்சு இலங்கை ரசிகர்களை கொண்டாட வைத்தது. பதிரானா உண்மையில் வேகமான பந்து வீச்சில் 175 கி. மீ வேகம் இருந்ததா?அல்லது அது கடிகாரத்தின் பிழையா? என்று ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லா ஆய்வுக்கு பின் பார்த்தால், பதிரானா 175 கி. மீ வேகத்தில் பந்து வீசியுள்ளார் என்றே தெரியவந்தது. பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சர்வதேச கிரிக்கெட்டில் மிக வேகமாக பந்தை வீசிய சாதனையை இன்னும் வைத்திருக்கிறார்.



2003 உலகக் கோப்பையில், அவர் இங்கிலாந்துக்கு எதிராக 161. 3 கிமீ (100 மைல்) வேகத்தில் பந்து வீசினார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக வீசப்பட்ட முதல் மூன்று வீரர்களின் பட்டியலின்படி, 161. 3 கிமீ - ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்), ஒருநாள் எதிராக இங்கிலாந்து 2003ல் நியூலாண்ட்ஸில் வீசினார்.

161. 1 கி. மீ - ஷான் டைட் (ஆஸ்திரேலியா), ஒருநாள் போட்டி எதிராக இங்கிலாந்து 2010ல் லார்ட்சில் வீசினார். 161. 1 கி. மீ - பிரட் லீ (ஆஸ்திரேலியா), ஒருநாள் போட்டி நியூசிலாந்துக்கு எதிராக 2005ல் நேப்பியரில் வீசினார்.

பதிரானாவைப் பொறுத்தவரை, இது முதல் தடவையல்ல; அவர் 2019 செப்டம்பரில் நடந்த ஒரு கல்லூரி போட்டியில் வெறும் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிரான பந்துவீச்சில், பதிரானா 8 ஓவர்களில் 0/49 பதிவு செய்தார். ஜன.

22ம் தேதி நடைபெறும் ஐசிசி யு 19 உலகக் கோப்பையின் குரூப் ஏ மோதலில் இலங்கை யு 19 அடுத்ததாக நியூசிலாந்து யு 19 அணியை எதிர்கொள்ளும்.

.

மூலக்கதை