ரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்

புதுடெல்லி: இந்திய அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் பிப்.

21 முதல் 25ம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் பிப். 29 முதல் மார்ச் 4ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் மூத்த மிக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த்  சர்மா (31) கணுக்கால் மோசமாக காயமடைந்து, நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும்  டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

டெல்லியில் நடக்கும் ரஞ்சி டிராபியில், நடப்பு சாம்பியனான விதர்பாவின் இரண்டாவது இன்னிங்சின் ஐந்தாவது ஓவரில் இஷாந்த் சர்மா காயம் அடைந்தார்.

தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து, டெல்லி அணி நிர்வாகம் கூறுகையில், ‘நாங்கள் அவரது எம்ஆர்ஐ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

வீக்கம் உள்ளது, அது இப்போது மோசமாக தெரிகிறது. இது வீக்கம் மட்டும்தான்.

எலும்பு முறிவு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றனர்.

.

மூலக்கதை