கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்

கவுகாத்தி: மூன்றாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதியதில், தமிழக அணி 59-57 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா தலா நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நீச்சல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. ஹாக்கி, 17 வயதுக்குட்பட்ட சண்டிகர் வீரர்கள், உத்தரபிரதேசத்தை தோற்கடித்து தங்கம் வென்றார்.17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கூடைப்பந்தாட்டத்தில் ராஜஸ்தான் சிறுவர்கள் தங்கம் பெற்றனர். 21 வயதுக்குட்பட்ட சிறுவர் கால்பந்தில் அசாம் மகாராஷ்டிராவை மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
பளுதூக்குதலில் அசாம் வீரர்கள் இரண்டு தங்கங்களை வென்றனர்.

நீச்சலில் கர்நாடகாவின் ஸ்ரீஹரி நடராஜ், மேற்கு வங்கத்தின் சோப்ரிட்டி மொண்டோல் தலா இரண்டு தங்கங்களை வென்றனர். டெல்லி அனுராக் சிங், மகாராஷ்டிரா கெனிஷா குப்தா மற்றும் வேதாந்த் பாஃப்னா மற்றும் கர்நாடகாவின் சுவனா பாஸ்கர் ஆகியோர் நீச்சலில் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.21 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் பாவிகா துகர் (தமிழ்நாடு) - தங்கம், ருதுஜா தலேகான்கர் (மகாராஷ்டிரா) - வெள்ளி, மைத்ரயனா போசாலே (மகாராஷ்டிரா) - வெண்கல பதக்கம் வென்றனர்.

பதினொன்றாம் நாளில் 63 தங்கப் பதக்கங்களுடன் மகாராஷ்டிரா பதக்க எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது.

.

மூலக்கதை