அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்

பாக்தாத்: பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆனால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் எதுவும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ராக்கெட் தாக்குதலின் தாக்கத்திற்குப் பிறகு சைரன்கள் அலறின.

ஈரான் ஆதரவு துணை ராணுவப்படைகள் மீது அமெரிக்கா தரப்பில், இந்தத் தாக்குதலுக்காக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. மேலும், இதேபோன்ற தாக்குதல்களை தொடர்ந்து ஈரான் ஆதரவு ராணுவப் படைகள் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

படைத் தளபதி சுலைமானி கொலைக்குப் பிறகே ஈராக்கில் உள்ள அமெரிக்க முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்போது நடந்துள்ள இந்தத் தாக்குதலால், மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அரசுக் கட்டிடங்கள், அயல்நாட்டு மிஷன்கள் ஆகியவை உள்ளன. ஈராக் போலீசார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘3 கத்யூஷா ராக்கெட்டுகள் உயர் பாதுகாப்பு கிரீன் மண்டலம் அருகே விழுந்தது.

உயிர்பலி குறித்து தகவல்கள் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை