சீனாவில் பலி எண்ணிக்கை இன்றுடன் 4 ஆக உயர்வு: ‘கொரோனா’ வைரஸ் பரவலால் கொல்கத்தா விமான நிலையம் அலர்ட்: மத்திய சுகாதார துறை எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் பலி எண்ணிக்கை இன்றுடன் 4 ஆக உயர்வு: ‘கொரோனா’ வைரஸ் பரவலால் கொல்கத்தா விமான நிலையம் அலர்ட்: மத்திய சுகாதார துறை எச்சரிக்கை

கொல்கத்தா: ‘கொரோனா’ வைரஸ் பரவலால் சீனாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொல்கத்தா விமான நிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளை விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.

சீனாவின் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் ‘கொரோனா’  வைரசால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தாய்லாந்து நாட்டுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.

இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என கண்டறியப்படவில்லை.

விலங்குகளிலிருந்து மனிதருக்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த வைரஸ் குறித்து ஆராய்ந்து வரும் சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் உள்ள 45 வயது இந்தியப் பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது. சீனாவுக்கு அருகில் இருப்பதால் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கைகளை மாநில அரசுக்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.

இவ்வகை  வைரசை கண்டறிய புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களும் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கிய ‘சார்ஸ்’ வகை வைரஸ் 774 பேரை பலிகொண்டது.



இது  மிருகத்திலிருந்து மனிதனுக்கு வந்திருக்கிறது. பிறகு மனிதனிலிருந்து  மனிதனுக்கே பரவுகின்றது.

இதனால் இந்தியா உட்பட உலக  நாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு  இருக்கிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற  நாடுகளில் விமான நிலையத்திலேயே சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய  விமானங்களில் இருந்து வருபவர்கள்  இந்த வைரஸ் கிருமியால்   பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் இன்றுடன் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நகரமான வுஹானில் இருந்து பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கு பரவியுள்ளது.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீனாவிற்கு வெளியே அதாவது தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.   சீனாவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 217 வைரஸ் பாதிப்புகளை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் பரவல் ஒரு சர்வதேச சுகாதார அவசரநிலையாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை, உலக சுகாதார அமைப்பு வர்த்தக அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கவில்லை.



இந்நிலையில், சீனாவின் மர்ம வைரஸ் கொல்கத்தாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், நாட்டின் தென்கிழக்கு பகுதி வழியாக  நுழைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிமோனியா போன்ற அறிகுறிகளைத் தூண்டிய கொரோனா வைரசின் பரவலை தடுக்க அந்நாட்டுக்கு பயணிகள் செல்வது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பயண ஆலோசனையை வழங்கி உள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய இயக்குனர் கவுசிக் பட்டாச்சார்ஜி கூறுைகயில், ‘கொல்கத்தா விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் குறித்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.

கொல்கத்தாவிலிருந்து நேரடியாக சீனாவின் மூன்று இடங்களுக்கு 4 விமானங்கள் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை