பெங்களூருவில் நேற்று கிரிக்கெட் போட்டியின்போது ரூ2 கோடிக்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூருவில் நேற்று கிரிக்கெட் போட்டியின்போது ரூ2 கோடிக்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, ரூ2 கோடி வரை சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி முறையே 119 மற்றும் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியின் வெற்றியின் மூலம், இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

முன்னதாக, கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான டிக்கெட்கள் விற்கப்பட்டன.

ஆனால், கிரிக்கெட் பந்தயத்தில் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 11 பேரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 70 மொபைல் போன்கள், 2 டிவிகள், ஹார்ட் டிஸ்க் மற்றும் 7 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியில் 2 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், போலி டிக்கெட் விற்ற வகையிலும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

.

மூலக்கதை