புதுச்சேரி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தலைமறைவானவர்கள் 24 மணி நேரத்திற்குள் சரணடைய சிபிசிஐடி கெடு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
புதுச்சேரி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: தலைமறைவானவர்கள் 24 மணி நேரத்திற்குள் சரணடைய சிபிசிஐடி கெடு

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் 5 போலீசாரும் 24 மணி நேரத்திற்குள் சரணடைய வேண்டும் என்று சிபிசிஐடி கெடு விதித்துள்ளது.

இல்லையென்றால், அந்த ஐவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களது புகைப்படங்களுடன் கூடிய நோட்டீஸ் பொதுமக்கள் அறியும் வகையில் ஒட்டப்படும் என்று சிபிசிஐடி கண்காணிப்பாளர் வெங்கடசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 3 சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக ஒரு கும்பல் பிடிபட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமிகளுடன் போலீசாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, நடத்தப்பட்ட அணிவகுப்பு சோதனையில்,8 காவல்துறை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஒருவரை சம்பந்தப்பட்ட சிறுமிகள் அடையாளம் காட்டினர். 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மரணமடைந்தார். இவர்களில் 3 பேர் கடந்த சனிக்கிழமை சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தனர். எனினும், மற்ற 5 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

 

மூலக்கதை