விஜய தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சங்கி பாண்டேவின் மகள்

தினமலர்  தினமலர்
விஜய தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சங்கி பாண்டேவின் மகள்

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜயதேவரகொண்டா நடிக்கப்போகும் படம் பைட்டர். இந்த படத்திற்காக தாய்லாந்தில் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் விஜயதேவரகொண்டா. மேலும், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

ஆனால், இப்போது பிரபல பாலிவுட் நடிகையான சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே விஜயதேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவர் பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2, பதி பட்னி அவுர் வோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய தேவரகொண்டாவிற்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இதன்மூலம் கடந்த சில மாதங்களாகவே விஜய தேவரகொண்டாவின் அடுத்த படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதாக வெளியாகி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை