மீண்டும் பவதாரிணி: பெயரையும் மாற்றினார்

தினமலர்  தினமலர்
மீண்டும் பவதாரிணி: பெயரையும் மாற்றினார்

இளையராஜாவின் மகள் பவதாரிணி. ‛மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர், ‛பாரதி' படத்தில் தேசிய விருது பெற்றார். அதன்பிறகு ரேவதி இயக்கிய ‛மித்ரு மை பிரண்ட்' படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். ‛அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி' உள்பட சில படங்களுக்கு இசை அமைத்தார். இந்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் விலகி இருந்த பவதாரிணி தற்போது ‛மாயநதி' என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.

அபி சரவணன் நடித்துள்ள இந்தப் படத்தை அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்கி உள்ளார். ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு பவதாரிணி இசை அமைத்துள்ளார். தனது பெயருக்கு முன்னால் அப்பாவின் பெயரின் ஒரு பகுதியான ராஜா என்பதையும் இணைத்து ராஜா பவதாரிணி என்ற புதிய பெயருடன், புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

மூலக்கதை