மணிரத்னம், முருகதாஸ், பிரபுதேவா இடத்தை பிடிப்பாரா விஷ்ணுவர்த்தன்

தினமலர்  தினமலர்
மணிரத்னம், முருகதாஸ், பிரபுதேவா இடத்தை பிடிப்பாரா விஷ்ணுவர்த்தன்

தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன் விஷ்ணுவர்த்தன். குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர். அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கினார்.

இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றை இயக்குகிறார் விஷ்ணுவர்த்தன். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை தழுவி ‛ஷேர்ஷா' என்ற பெயரில் இயக்கி வருகிறார். விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். அவரது மனைவி டிம்பிள் சீமாவாக கிரா அத்வானி நடிக்கிறார். ஜாவீத் ஜெப்ரி பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாகவும், பரேஷ் ராவல் இந்திய ராணுவ அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தனது நண்பர்களுடன் இணைந்து கரண் ஜோகர் தயாரிக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. வருகிற ஜூலை மாதம் 3ல் படம் வெளிவருகிறது.

தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா போன்றவர்கள் அங்கு பிரமாண்ட இயக்குனர்களாக வெற்றி பெற்றார்கள். அந்த இடத்தை விஷணுவர்தன் பிடிப்பாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.

மூலக்கதை