மாஸ்டர்: வைரலான விஜய் - மாளவிகா மோகனன்

தினமலர்  தினமலர்
மாஸ்டர்: வைரலான விஜய்  மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛மாஸ்டர்' படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு, சென்னை, டில்லி, கர்நாடக என பல பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையில் நடக்கிறது.

இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு, விஜய் மற்றும் மாளவிகா மோகனன் உடன் ஆக்ஷன் காட்சி உள்ளதாம். இந்த சண்டை காட்சிக்காக மாளவிகா மோகனனுக்கு பிரத்யேக பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய், மாளவிகா மோகனன் இருவரும் அருகருகே பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமொன்று சமூக வலைதளத்தில் வைரலானது. டிரிம் செய்யப்பட்ட தாடி, மீசையுடன் விஜய் இருக்கிறார்.

மூலக்கதை