ஓராண்டு பின் கீர்த்தி சுரேஷ் படம் திரைக்கு வருகிறது

தினமலர்  தினமலர்
ஓராண்டு பின் கீர்த்தி சுரேஷ் படம் திரைக்கு வருகிறது

2018ல் பிசியான நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை. இந்தாண்டு, ‛பென்குயின், ரஜினி 168' படங்களில் நடிப்பவர், தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.

தாய் மொழியான மலையாளத்தில் மோகன்லாலுடன் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற படத்திலும் நடித்து வந்தார். ஆர்ச்சா என்ற கேரக்டரில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

பிரியதர்ஷன் இயக்கும் இப்படம் மார்ச் 26ல் திரைக்கு வருகிறது. ஐந்து மொழிகளில் உலகம் முழுக்க 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். ஓராண்டு இடைவெளிக்கு பின் முதல் படமாக இது வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மூலக்கதை