ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஒசாகா, செரீனா வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஒசாகா, செரீனா வெற்றி

மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு  சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா-செக்குடியரசின் மேரி பவுகோவாவுடன் மோதினார்.

இதில் 6-2,6-4  செட் கணக்கில் ஒசாகா வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2,, 6-4 என்ற செட் கணக்கில், இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனை வீழ்த்தினார்.

குரோஷியாவின் பெட்ரா மார்டிக் 6-3,6-0 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் கிறிஸ்டினாமெக்ஹேல்லை  தோற்கடித்தார். அதேபோல் செரீனா வில்லியம்ஸ் 6-0,6-3 என ரஷ்யாவின் அனஸ்தேசியாவை வீழ்த்தி 2வது சற்றுக்குள் நுழைந்தார்.

ஜெர்மனியின் ஜூலியா கோர்கஸ் 6-1,6-2 என ஸ்லோவாகியாவின் விக்டோரியாவை வீழ்த்தினார்.

.

மூலக்கதை