கருண் நாயருக்கு டும்..டும்...

தமிழ் முரசு  தமிழ் முரசு
கருண் நாயருக்கு டும்..டும்...

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர். 28 வயதான இவர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டியில் ஆடி 374 ரன் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்குஎதிரான டெஸ்ட்டில் 303 ரன் விளாசினார். இந்நிலையில் தனது நீண்டநாள் காதலியான சனாயா தன்ஹாரிவாலாவை திருமணம் செய்துகொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற திருமண  நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், வருண் ஆரோன், சாகல், சார்துல் தாகூர், அஜிங்கியா ரஹானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை