ஜே.பி. நட்டா தேசிய தலைவராக பொறுப்பேற்க ‘ஏகாதசி’ திதி வரை காந்திருந்த பாஜக: பிற்பகல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜே.பி. நட்டா தேசிய தலைவராக பொறுப்பேற்க ‘ஏகாதசி’ திதி வரை காந்திருந்த பாஜக: பிற்பகல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவராக ஜே. பி. நட்டா இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ‘ஏகாதசி’ திதிக்காக பிற்பகல் வரை அக்கட்சி தலைமை காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

21 மாநிலங்களில் பாஜக தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ராதாமோகன் சிங் கூறியுள்ளார். பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை 10 மணியிலிருந்து 12. 30 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தற்போது பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே. பி. நட்டா மட்டுமே இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குபின், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள்  ஆராயப்பட்டு, பிற்பகல் 2. 30 மணி வரை இந்த நிகழ்வுகள் நடைபெறும்.

அதன்பின் மதியம் 2. 30  மணிக்கு மேல், பாஜக-வின் தேசிய தலைவராக ஜே. பி. நட்டா  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். 59 வயதான ஜே. பி. நட்டா இமாச்சல் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஜே. பி. நட்டா, கட்சியின் செயல் தலைவராக இருந்து பாஜகவின் தேசியத் தலைவராக இன்று பதவி உயர்வு பெறுகிறார்.



இந்நிலையில், தேசிய தலைவர் பதவியை ஏற்கும் விசயத்தில் நாட்டின் பெரிய தேசிய கட்சியாக கருதப்படும் பாஜக தலைமை, இன்று 2. 30 மணிக்கு மேல் ‘ஏகாதசி‘ திதி தொடங்குவதால், அதன்பின்னரே தேசிய தலைவர் பொறுப்பை நட்டா ஏற்க வசதியாக தேர்தல் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ‘ஏகாதசி’ திதியில் தேசிய தலைவரை தேர்வு செய்வது, நல்ல அம்சத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சமஸ்கிருதத்தில், ‘ஏகாதசி’ என்பது 11, அதாவது பதினொன்றாம் நாளில் வளரும் வளர்பிறை அடிப்டையாக கொண்டது.

அதனால், நட்டா தேர்வு இந்த தேதியில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது

.

மூலக்கதை