சிஏஏ ஆதரவு போராட்டம்: பாஜக தொண்டருக்கு ‘பளார்’ விட்ட கலெக்டர்... துணை ஆட்சியரை இழுத்து சென்று அட்டூழியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிஏஏ ஆதரவு போராட்டம்: பாஜக தொண்டருக்கு ‘பளார்’ விட்ட கலெக்டர்... துணை ஆட்சியரை இழுத்து சென்று அட்டூழியம்

போபால்: மத்திய பிரதேசத்தில் ராஜ்கார்க் பகுதியில் சிஏஏவிற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று போராட்டம் நடந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்டதால், அவர்களை கலைந்து செல்ல அம்மாவட்ட கலெக்டர் நிதி நிவேதா மற்றும் துணை ஆட்சியர் பிரியா வர்மா எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் இவர்கள் கோரிக்கையை ஏற்காத பாஜகவினர், அங்கு போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக பாஜக தொண்டர்கள் கலெக்டர் நிதி நிவேதா மற்றும் துணை ஆட்சியர் பிரியா வர்மாவை தாக்கினர்.

இதுகுறித்து, ராஜ்கார்க் கலெக்டர் நிதி நிவேதிதா கூறுைகயில், ‘‘ராஜ்கார்க் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி போராட்டம் செய்ய பாஜகவினர் கூடினர்.

பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். நாங்கள் அதை தடுக்க சென்ற போது எங்களையும் தாக்கினர்.



தொண்டர்கள் சிலர் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். ஒருவர் தவறாக சீண்ட முயன்றனர்.

அதனால் அந்த நபரை அறைந்தேன். இதை தட்டிக்கேட்ட துணை கலெக்டர் பிரியா வர்மாவையும் தாக்கினர்.

அவரின் கையை பிடித்து முறுக்கி திருகினர். பின் பிரியா வர்மாவின் தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து சென்றனர்.

எங்களை அவர்கள் தாக்கி, அவமானப்படுத்த முயன்றுள்ளனர். அங்கிருந்து வெளியேற எங்களுக்கு போலீஸ்தான் உதவியது.

இரண்டு பேர் மீது போலீசில் முறையாக வழக்கு பதியப்பட்டுள்ளது’’ என்றார்.

.

மூலக்கதை