காஷ்மீரில் இணைய சேவை கொடுத்தால் ‘பலான’ படங்களை பார்க்கின்றனர்: நிதிஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் இணைய சேவை கொடுத்தால் ‘பலான’ படங்களை பார்க்கின்றனர்: நிதிஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு

காந்திநகர்: ‘ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவை கொடுத்தால், அங்கு ‘பலான’ படங்களைத்தான் பார்க்கின்றனர்’ என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நிதிஆயோக் உறுப்பினர் சரஸ்வத் பேசியுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள திருபாய் அம்பானி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி வருடாந்திர மாநாட்டில் முதன்மை விருந்தினராக நிதிஆயோக் உறுப்பினர் சரஸ்வத் பங்ேகற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், அது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்கட்சி தலைவர்கள் ஏன் காஷ்மீர் செல்ல விரும்புகிறார்கள்? காஷ்மீரிலும் டெல்லியின் சாலைகளில் நடக்கும் போராட்டங்களை போல் மீண்டும் உருவாக்க அவர்கள் விரும்புகிறார்களா?

ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதற்கு அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

காஷ்மீரில் இணையம் இல்லையென்றால் என்ன நடந்துவிடப் போகிறது? அங்கு இணையத்தில் என்ன பார்க்கிறார்கள்? அங்கு என்ன ‘இ-டைலிங்’ நடக்கிறது? பாலியல் ஆபாச ‘பலான’ படங்களைத் தான் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

நிதி ஆயோக் உறுப்பினரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் சரஸ்வத் பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் 2019 ஆக. 5ம் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், தகவல் தொடர்பு இணைய சேவை நிறுத்தத்தில் உள்ளது.

இணைய சேவைகள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் போஸ்ட்பெய்ட் இணைப்புகளில் ஓரளவு நீக்கப்பட்டது.



தகவல்தொடர்பு நிறுத்தப்பட்டது மட்டுமின்றி, அரசியல் தலைவர்களையும் தடுப்பு காவலில் மத்திய அரசு வைத்துள்ளது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் இன்றும் நடைமுறையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை