கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு: நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கம்போடியாவில் உலகத் திருக்குறள் மாநாடு: நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்...

அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா இரண்டுநாள் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டில்  உலகப் பொதுமறை திருக்குறள் தந்த வான்புகழ் வள்ளுவருக்கு கம்போடிய நாட்டில் சிலை நிறுவப்படுகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வான்புகழ் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் இன்றளவும் 20 க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும்  உலகத் திருக்குறள் மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து திருக்குறள் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள் குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அரசுத்துறை அலுவலர்கள் அமைச்சர் பெருமக்கள் என பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழர் நடுவம், அங்கோர் தமிழ்ச்சங்கம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் இணைந்து இவ்விழாவினைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். 

விழாவில்….

திருவள்ளுவர் சிலை திறப்பு, கெமர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு, கருத்தரங்கம் திருக்குறள் சார்ந்த சொற்பொழிவுகள் ஆய்வு நூல்கள் வெளியீடு, அங்கோர் தமிழ்ச்சங்க மலர் வெளியீடு, தமிழ்ச்சான்றோர்களுக்கு கம்போடிய அரசு விருதுகள் இரண்டு நாள் சுற்றுலா…..என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழா குறித்த விரிவான செய்திகளும் மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் தொடரும்... அனைவரும் வருக!!! அங்கோர் தமிழ்ச் சங்கம்,கம்போடியா Email: [email protected].

 

மூலக்கதை