பாமாயில் இறக்குமதியை நிறுத்திய இந்தியா: பதிலடி தரும் அளவுக்கு தங்கள் நாடு பெரிய நாடு இல்லை: மகாதீர் முகம்மது

தினகரன்  தினகரன்
பாமாயில் இறக்குமதியை நிறுத்திய இந்தியா: பதிலடி தரும் அளவுக்கு தங்கள் நாடு பெரிய நாடு இல்லை: மகாதீர் முகம்மது

மலேசியா: பாமாயில் இறக்குமதியை நிறுத்திய இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு தங்கள் நாடு பெரிய நாடு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலத்தை 2ஆக பிரித்தது ஆகியவற்றை மகாதீர் முகம்மது விமர்சித்து பேசியிருந்தார். மேலும் சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார். இதை தவிர்க்கும்படி இந்தியா வலியுறுத்தியும் அதனை மகாதீர் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து வந்தார். இதையடுத்து மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது.உலகளவில் பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தோனேஷியா முதலிடத்திலும், மலேசியா 2வது இடத்திலும் உள்ளன. அதே நேரம், மலேசியாவை விட இந்தோனேஷியா மிக குறைந்த விலைக்கே பாமாயிலை விற்பனை செய்கிறது. இருப்பினும், மலேசியா தனது நெருங்கிய நட்பு நாடு என்பதால், அந்த நாட்டிடம் இருந்தே இந்தியா ஆண்டுதோறும் 44 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம், இந்நாட்டிடம் இருந்து அதிகளவில் பாமாயில் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தை சீனாவும், 3வது இடத்தை பாகிஸ்தானும் உள்ளன. இந்நாடுகள் கடந்த ஆண்டுக்கு முறையே 24 லட்சம் டன்னும், 10 லட்சம் டன்னும் வாங்கியுள்ளன.இதனையடுத்து  பாமாயில் இறக்குமதியை நிறுத்திய இந்தியாவின் நடவடிக்கையால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்தது. மேலும் இதுகுறித்து லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிறிய நாடான தங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது என்றும், இந்த பிரச்சனையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

மூலக்கதை