இறால் மீன்பாடு அதிகம்: மீனவர்கள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
இறால் மீன்பாடு அதிகம்: மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ஐந்து நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்று திரும்பிய மீனவர்களின் படகுகளில் இறால் மீன்பாடு அதிகமாக இருந்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பொங்கல் கொண்டாட்டம் முடிந்து ஐந்து நாட்களுக்குப்பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்பாடு இருக்கும் என்ற உற்சாகத்தில் மீனவர்களும் படகில் சென்றனர். அனைத்து படகுகளும் ஒவ்வொன்றமாக இன்று கரைக்கு வந்ததை தொடர்ந்து படகில் பிடித்து வரப்பட்ட மீன்களும் கரையில் இறக்கப்பட்டன. கூடைகளில் கரைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களை வியாபாரிகள் விலைக்கு வாங்கி சென்றனர். இதனிடையே இறால் மீன் பிடிக்க சென்ற படகுகளிலும் அதிகளவில் இறால் மீன்பாடு இருந்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில படகுகளில் பயன்படுத்த இரட்டைமடி வலையை இந்திய கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர்.

மூலக்கதை